மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் நாளிலேயே பிரமாண்ட வசூல் சாதனை படைத்த துணிவு... அடேங்கப்பா உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா!!
நேர் கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு என்ற படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளார். இந்த படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார். பஞ்சாப்பில் நடைப்பெற்ற வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல் 50 கோடிக்கும் அதிகம் என தகவல் வந்திருக்கிறது. முதல் நாளிலேயே பிரமாண்ட வசூல் சாதனை படைத்த துணிவு திரைப்படத்தில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.