#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏகே 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார்.இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. எச்.வினோத் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது.
இந்நிலையில் அஜித்தின் கே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏகே 62 படத்திற்காக அஜித் ரூ. 100 கோடி கேட்க தயாரிப்பு நிறுவனம் அதிகமாக ரூ. 105 கோடி தருவதாக அவர்களே முன்வந்துள்ளனர்.
தற்போது வெளியான புதிய தகவல் படி ஏகே 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் ரூ 50 லட்சம் மட்டுமே சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் லைகா புரொக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன்-சிவகார்த்திகேயன் ஒரு படம் இணைய இருந்தார்களாம், அதற்காக அட்வான்ஸ் பணம் எல்லாம் வாங்கினாராம். ஆனால் அந்த படம் டிராப் ஆக இருக்கிறது. எனவே தான் குறைவான சம்பளம் பெறுவதாக தகவல் பரவி வருகிறது.