திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விடாமுயற்சி விபத்தை வைத்து அஜித்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்; வைரலாகும் மீம் இதோ.!
மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ரா உட்பட பலர் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், ரூ.200 கோடி செலவில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பெற்ற படங்களில் ஒன்றாக இருக்கிறது. படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற விபத்து குறித்த காணொளி சமீபத்தில் வெளியானது.
அதில் நடிகர் அஜித் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியபோது விபத்து ஏற்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் படத்திற்காக தனது உயிரை தல அஜித் பணயம் வைத்துள்ளதாக கூறி பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மங்காத்தா படத்தின் போது இருசக்கர வாகனத்தை இயக்கியது, தற்போது விபத்தில் சிக்கியது மற்றும் எதிர்காலத்தில் விமானத்தை இயக்கி விபத்தில் சிக்குவார் என கலாய்த்து புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவுகள் உங்களின் பார்க்கவைக்காக இணைக்கப்பட்டுள்ளது.