திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படப்பிடிப்பில் நடந்த துயரம்: லைட் மேன் மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உட்பட பலர் நடித்து உருவாகி வரும் படம் அகரம் காலனி. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்துள்ளது.
நேற்று நள்ளிரவு இரவு படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரியவரும் நிலையில், லைட்மேன் சண்முகம் என்பவரின் மீது மின்சாரம் தாக்கி இருக்கிறது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு தொழிலாளியும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.