#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடப்பாவமே... எப்படி நடந்தது... சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ... வருந்தும் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் பின்னர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகளும், அர்ஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஆல்யா தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா மானசாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் அவருக்கு சிறிய சர்ஜரியும் நடந்தது.
இந்நிலையில் ஆல்யாவின் இந்த எலும்பு முறிவு அவருக்கு கபடி விளையாடும் போது ஏற்பட்டுள்ளதாம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆல்யா விரைவில் நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.