பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சமந்தாவிற்கு செம அட்டகாசமான பரிசளித்து அசத்திய பிரபல முன்னணி நடிகர்! எதற்காக தெரியுமா?
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் நடிகை சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் வசூல் சாதனையும் குவித்தது.
இந்நிலையில் சமந்தாவின் ஓ பேபி பட வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் சமந்தாவிற்கு ஒரு செடி தொட்டியை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.