மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2.0 படத்தில் விஜய்யை தாக்கி பேசினாரா ரஜினி? அந்த வசனத்தை கவனித்தீர்களா?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது 2.0 திரைப்படம். தமிழ் சினிமாவில் மிகவும் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 2.0. படம் வெளியான அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது 2.0 திரைப்படம்.
தமிழ் சினிமாவினை உலகம் முழுவதும் தலைநிமிர வைத்த பெருமை இயக்குனர் சங்கரை சேரும். இந்நிலையில் நடிகர் விஜய்யை தாக்குவதுபோல ஒரு வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் எனவும், தற்போது விஜய்தான் நம்பர் ஒன்னு எனவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் வருவது வழக்கமாகிவிட்டது.
இதற்கு பதில் கூறும் விதமாக 2.0 படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும். அதில் நடிகை எமிஜாசன் அவர்தான் நம்பர் ஒன்னு என்று கூறுவார். அதற்கு, யாரும் நம்பர் ஒன்னு கிடையாது, நான்தான் எப்போதும் நம்பர் ஒன்னு, சூப்பர் என்று கூறுவார் ரஜினிகாந்த். இது படத்திற்காக சொல்லப்பட்ட வசனமாக இருந்தாலும் ஒருவேளை விஜய்யை தாக்கி சொல்லப்பட்டதா என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.