மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.. இதுதானா! இரண்டாவது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போறீங்க?? ஆலியா சொன்ன கியூட் பதிலை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரில் ஜோடியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்த அவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
மேலும் ஆலியா தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆலியா தற்போது மீண்டும் இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார். அதனை அவரே மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர்கள் ரீல்ஸ் வீடியோ மற்றும் ஐலாவின் க்யூட் வீடியோ போன்றவற்றை வெளியிடுவர்.
இந்த நிலையில் அண்மையில் ஆலியா சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் இரண்டாவது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போறீங்க? என கேட்டுள்ளார். அதற்கு அவர் பெண் குழந்தை பிறந்தால் லைலா மற்றும் ஆண் குழந்தை பிறந்தால் ஆர்ஷ் என பெயர் வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்