மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி நான்தான்.. ஷாக் கொடுத்த ராஜாராணி2 புதிய சந்தியா! அட.. ஆலியாவும் இப்படி சொல்லிட்டாரே!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு தற்போது ஒளிபரப்பாகும் ராஜாராணி 2 தொடருக்கும் மக்களிடையே அமோக வரவேற்பு உண்டு. இந்த சீரியலில் ஹீரோவாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வந்தார்.
ஆலியா ராஜாராணி முதல் பாகத்திலும் ஹீரோயினாக நடித்தார். அப்பொழுது தனக்கு ஜோடியாக ஹீரோவாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சில காலங்களுக்கு முன்பு ராஜாராணி 2 சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் நேற்று அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் ராஜாராணி 2 தொடரில் புதிய சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். இதனிடையில் ரசிகர்கள் குழந்தை பிறந்த சில காலங்களுக்குப் பிறகு ஆலியா மீண்டும் நடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிக்கப் போவதில்லை எனவும், ரியாதான் நிரந்தர சந்தியா எனவும் அவர்களே சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். இது ஆலியா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.