மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சின்னத்திரை நடிகை ஆல்யா மான்ஸாவின் எடைக்குறைப்பு ரகசியம்!" அவரே சொன்ன தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்தத் தொடரில் செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆல்யா. இதையடுத்து 2019ம் ஆண்டு சக நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே "ராஜா ராணி 2" தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்த ஆல்யா மானசா, குழந்தைப் பிறப்புக்கு பின்னர் உடல் எடை அதிகரித்துக் காணப்பட்டார்.
இதையடுத்து தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் ஆல்யா மானசா, தனது உடல் எடைகுறைப்புக்கான சீக்ரட்டை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, "எல்லோரும் உடல் எடையைக் குறைக்க என்ன முயற்சிகள் மேற்கொள்கிறார்களோ அதையே தான் நானும் மேற்கொள்கிறேன்.
தினமும் 3மணி நேர உடற்பயிற்சி, ஒரு மணிநேர பாக்சிங் செய்து வருகிறேன். மேலும் தினமும் 3லிட்டர் சீரகத் தண்ணீர் குடிக்கிறேன். இதனால் ஒரே மாதத்தில் 10கிலோவுக்கு மேல் குறைத்துள்ளேன். மேலும் சோம்பு மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரை நாள்முழுக்க குடித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.