மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்த நடிகை அமலா பால்; லிப் லாக் அடித்து செலிபிரேசன்..!
தமிழில் சிந்துசமவெளி, மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அமலா பால்.
இவர் கடந்த 2014ல் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் அவரை பிரிந்தார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியான படங்களிலும் அமலா பால் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கும் நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களில் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக வாழ்வார்.
இவர் இன்று தனது 32வது பிறந்தநாளை சிறப்பித்து வரும் நிலையில், பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே, அமலா பாலின் நண்பர் ஜகத் தேசாய், அமலாவுக்கு காதலை வெளிப்படுத்தி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அவரின் பதிவுப்படி காதலுக்கு அமலா பச்சைக்கொடி காண்பித்தும் உறுதியாகிறது.