மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாவாகப்போகும் அமலாபால்.. அவரே வெளியிட்ட பதிவு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அமலாபால். அதன்படி, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து பல்வேறு சர்ச்சையான திரைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளில் ஜெகத் தேசாய் என்ற புதிய காதலர் ஒருவரை அறிமுகம் செய்தார். இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் திருமணமும் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.