தெலுங்கில் நடிக்காததற்கு இதுதான் காரணம்! என்ன.. அமலா பால் இப்படி சொல்லிட்டாரே! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். ஆனால் அவர் அதனையடுத்து வெளிவந்த மைனா படத்தில் நடித்ததன் மூலமே மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நிலையில் அமலா பால் விஜய், ஆர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் என பல டாப் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த அவர் தெலுங்கில் குறைந்த படங்களிலேயே நடித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், நான் தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்தபோது, தெலுங்கு திரையுலகம் குறிப்பிட்ட சில குடும்பங்களின் பிடியில் இருப்பதை உணர்ந்தேன். தெலுங்கில் நான் நடித்தபோது படங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் இரு கதாநாயகிகள் இருப்பார்கள். கதாநாயகியை வெறும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
ஹீரோயின் சில காதல் காட்சிகள், பாடல்களில் மட்டுமே வருவர். மற்ற பகுதி முழுவதையும் ஹீரோ ஆக்ரமித்திருப்பார். முழு கமர்சியல் படங்களை மட்டுமே அவர்கள் எடுப்பார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் என்னால் நீடிக்க முடியவில்லை. அதே சமயம் தமிழில் நடிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. மைனா படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின் படவாய்ப்புகளும் வந்தது என கூறியுள்ளார்.