#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமலாபாலின் திடீர் ட்விட்டர் பதிவு.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்.?
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அமலா பால். இவர் தமிழ் இயக்குனர் ஏ. எல் .விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட வேகத்திலேயே விவாகரத்தும் செய்துகொண்டார்.
சமீபத்தில் இவர் நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் "டீச்சர்", "கிறிஸ்டோபர்" ஆகியவை வெவ்வேறு மாதிரியான வரவேற்பை பெற்றன. தற்போது இணையத் தொடர்களிலும் அமலா பால் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் என்ற நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார்கள். இதில் அமலா பால் ப்ரித்விராஜுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், "அதோ அந்த பறவை போல"திரைப்படமும் வெளியீட்டிற்கு காத்துள்ளது.
இந்நிலையில், அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து," தனக்குத் தானே உதவிக்கு கொள்பவர்களுக்கு இந்தப் பிரபஞ்சமும் உதவும். அதனால் உங்களால் முடிந்ததை எப்போதும் செய்யுங்கள். மீதியை இந்தப் பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும்"என்று பதிவிட்டுள்ளார்.