வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அப்பாடா.. ஒருவழியாக கல்யாண தேதியை அறிவித்த அமீர்- பாவனி ஜோடி.! அதுவும் எப்போ தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்கள் அமீர்-பாவனி. பாவனி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பாவனி ஏற்கனவே திருமணமானவர். பாவனி தன்னுடன் பாசமலர் என்று தொடரில் நடித்த பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பிரதீப் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பாவனி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு சக போட்டியாளரான அமீர் ப்ரபோஸ் செய்தார். ஆனால் அவர் தனது கணவரின் சோகமான நினைவால் அமீரின் காதலை ஏற்க மறுத்தார். ஆனால் தொடர்ந்து அமீர் தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தநிலையில் பாவனி அவரை ஏற்றுக் கொண்டார். இருவரும் தற்போது லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வருகின்றனராம்.
இந்த ஜோடியிடம் பல பேட்டிகளில் தொடர்ந்து உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வியே எழுப்பப்பட்டது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர்கள் வருகிற நவம்பர் மாதம் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளோம். நவம்பர் 9, பாவனியின் பிறந்தநாளன்று எங்களது திருமணம் நடைபெறும் என கூறியுள்ளனர்.