திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாடல்களே இல்லாத திரைப்படம்.! முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த கார்த்தி.!
நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதற்கு முன்னதாக மணிரத்தினத்திடம் ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்த அவர், தன்னுடைய தந்தை மற்றும் அண்ணனின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நடிகராக மாறினார். அதன்படி தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் கார்த்தி.
அதன் பிறகு ஒரே விதமான கதாபாத்திரங்களில் நடிக்காமல் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் ஒரு திரைப்படத்தை செய்து விட்டால் போதும் இயக்குனர் பிஸியாகி விடுவார் என்ற ஒரு பிம்பத்தை உண்டாக்கினார் நடிகர் கார்த்தி. அதற்கு உதாரணமாக லோகேஷ் கனகராஜ் அவர்களை சொல்லலாம். அந்த விதத்தில், அடுத்தடுத்த வித்தியாசமான இயக்குனர்களுடன் இணைந்து கார்த்தி பணிபுரிந்து வருகிறார்.
அண்மையில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் 25-வது திரைப்படமான ஜப்பான் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு எதிர்வரும் ஆண்டு துவங்கயிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடப்பு ஆண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஜப்பான் திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி 96 திரைப்படத்தின் இயக்குனரோடு இணைந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கின்றது 96 திரைப்படத்தின் முக்கியமான பலமாக அந்த திரைப்படத்தின் பாடல்கள் அமைந்தன. இந்த சூழ்நிலையில் தான் தற்போது 96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாடல்களே இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த திரைப்படத்தில் எப்படியாவது பாடல்களை இடம்பெற செய்ய வேண்டும் என்று சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்ட ஒரு திட்டமிட்டு வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும், இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஜ்கிரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு நடிகர் அரவிந்த்சாமி ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.