நீங்க எப்படி அந்த சீன் வைக்கலாம்.? உங்களின் அடுத்த படத்திற்கு என்ன நடக்கும் தெரியுமா.? சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்.!



anbumanai ramathas letter to actor surya

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக இப்படம் நல்ல பாராட்டை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படம் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. இப்படத்தில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 'ஜெய்பீம்' திரைப்படத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருக்கிறது என்றும், 

உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்ற போதிலும், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைக்கும் காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படமானது அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்த  மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.

படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை தரும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.