திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"11 வயதில் யாரோ என் டி-ஷர்ட்க்குள் கைவைத்து"..., ரொம்ப பயந்துட்டேன் - நடிகை ஆண்ட்ரியா பகீர் தகவல்..! அடச்சீ., இப்படியுமா இருக்காங்க?..!!
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஆண்ட்ரியா தனக்கு சிறுவயதில் நேர்ந்த துயரம் குறித்து தெரிவித்த தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பாடகியாக முதலில் அறிமுகமாகி, பின் கதாநாயகியாகவும் நடித்து வந்தார். தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் "அனல் மேலே பனித்துளி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஆண்ட்ரியா அளித்த பேட்டியில், "எனது தோற்றத்தினை வைத்து நான் நகரத்து மாடர்ன் பெண் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் அரக்கோணத்தில் ஒரு சிறிய டவுனில் வளர்ந்து ஒரே ஒரு அறை இருந்த வீடு, பின் இரண்டு அறைகள் இருந்த வீடு, அதன்பின் ஒரு அப்பார்ட்மெண்ட் என்று வாடகைக்கு இருந்து, தற்போது அப்பார்ட்மெண்ட்டை சொந்தமாக வாங்கி படிப்படியாக வளர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்.
இதுவரை இரண்டே முறைதான் பேருந்தில் பயணம் செய்துள்ளேன். வேளாங்கண்ணிக்கு 11 வயதில் சென்றபோது, யாரோ என் முதுகில் கை வைப்பது போல இருந்தது. திடீரென அந்த கை என் டிஷர்ட் உள்ளே சென்றதும் பயந்து போய் இருக்கையில் சற்றுமுன்னே அமர்ந்துகொண்டேன். அதனைப் போல கல்லூரிக்கு ஒருமுறை பேருந்தில் சென்றபோதும் நடந்தது.
அன்றே முடிவு செய்துவிட்டேன் இனி பேருந்தில் செல்லக்கூடாது என்று. பேருந்தில் செல்ல வேண்டாம் என்ற வாய்ப்பு எனக்கு இருந்தது போல, பல பெண்களுக்கு அமைவதில்லை. இந்த மாதிரி அத்துமீறல்கள் பற்றிதான் "அனல் மேலே பனித்துளி" படம் பேசியிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.