ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உங்க மகன்களுக்கு முதலில் அதை கற்றுக் கொடுங்க! ஆவேசமாக பொங்கியெழுந்த நடிகை ஆண்ட்ரியா! எதனால் தெரியுமா?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி 19 வயது இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு உடைத்து கொடூரமாக கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த அதிர்ச்சி மறைவதற்குள்ளேயே மீண்டும் உத்தர பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இத்தகைய கொடூர சம்பவங்களுக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கூறுகையில், பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழிய போவதில்லை. ஒரு பெண் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதற்கும், பாலியல் வன்கொடுமை செய்யப் படுவதற்கும் அவள் காரணமில்லை.
இந்தியத் தாய்மார்களே உங்களது பிள்ளைகளை ஒழுக்கபடுத்துங்கள். பெண்களை மதிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். உங்களது மகனை நேரத்தோடு சீக்கிரம் வீட்டிற்கு வர கூறுங்கள் என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.