மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே ஜாலிதான் போல.. வெளியான ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, தற்போது கதை களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, பல ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார். சமீபத்தில் இவர் பாடிய ம் சொல்றியா மாமா பாடல் மிகப்பெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பாரினில் ஃபன் செய்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.