மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப்-லாக், படுக்கையறை சீன்களில் நடிச்சது இதனால்தான்?? 'இச்' சர்ச்சைக்கு செம கூலாக பதிலளித்த குட்டி நயன் அனிகா!!
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமானவர். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள அவர் மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அனிகா நயன்தாரா சாயலில் இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்ததாலும் அவரை ரசிகர்கள் குட்டி நயன் என அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் 18 வயது நிறைந்த அனிகா தற்போது தெலுங்கில் புட்டப்பொம்மா என்ற படத்திலும், மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ஓ மை டார்லிங் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
அதாவது அப்படத்தில் அனிகா ஹீரோவுடன் மிக நெருக்கமாக படுக்கையறை, லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் முதல் படத்திலேயே இப்படியா? என விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து அனிகா விளக்கமளித்து கூறியதாவது, ஓ மை டார்லிங் திரைப்படம் முழு நீள காதல் படம்.
இந்த மாதிரியான படங்களில் நெருக்கமான காட்சிகளையும், முத்தக் காட்சிகளையும் தவிர்க்க முடியாது என்றும், அதில் வரும் முத்தக் காட்சிகளின் முக்கியத்துவத்தை இயக்குனர் கதை கூறும்போதே தன்னிடம் கூறினார். அதனால் கதைக்கு தேவைப்பட்டதால் அவ்வாறு நடித்தேன். அந்த காட்சிகளை பார்க்கும்போது கண்டிப்பாக ஆபாசமாக இருக்காது. படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.