அடேங்கப்பா! ஹீரோயினாக அவதாரம் எடுக்கிறாரா குட்டி நயன் அனிகா! அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அதனை தொடர்ந்து அனிகா நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார். பின்னர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அனிகா ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் ரசிகர்களால் குட்டி நயன் எனவும் அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் முகம்மது முஸ்தபா இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கப்பேலா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாகவும், மலையாளத்தில் அன்னா பென் நடித்த கேரக்டரில் அவர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.