மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமர்சன ரீதியாக மரண அடி வாங்கிய அனிமல் திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் கதாநாயகி இவர்தான்.!
அண்மையில் ஹிந்தியில் படமாக்கப்பட்டு, பிறகு இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட திரைப்படம் தான் அனிமல்.சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த திரைப்படம் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கியது. இருந்தாலும், சில திரை பிரபலங்கள் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தனர். இந்த நிலையில் தான், இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக நடிகை மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதோடு, தமிழில் பேட்ட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அவதாரமெடுத்தவர் தான் இந்த மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது.