மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட. இது சூப்பராச்சே! கவினின் அடுத்த படத்தில் கைகோர்க்கும் முக்கிய மாஸ் பிரபலம்.! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானவர் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் அவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக காலடி பதித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லிப்ட். ஓடிடியில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து கவின், நடிகை அபர்ணா தாசுடன் இணைந்து நடித்த டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து கவின் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஊர்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தை இயக்குவதன் மூலம் பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சதீஷ் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். அப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ளாராம். மேலும் இந்த புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சூப்பரான தகவல் பரவி வருகிறது