மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிசியான இசையமைப்பாளராக மாறிய அனிரூத்.. எந்தெந்த படங்களுக்கு இசையமைக்கிறார் தெரியுமா.?
2011ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த "3" படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர். அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "வொய் டிஸ் கொலவெறி டி?" பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அனிருத்.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுக்கு அதிகமாக இசையமைத்து வந்த அனிருத் தற்போது விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ரஜினி, அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்து வருகிறார். இளைஞர்களின் வைப் மெட்டீரியலாக இருக்கிறார் அனிருத்.
இவருக்கு அடுத்த ஆண்டு மிகவும் பிஸியான ஆண்டாக இருக்கப் போகிறது. இப்போதே அடுத்த வருடம் அனிருத் இசையமைக்கும் படங்கள் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினியின் வேட்டையன், இதற்கடுத்து லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் இவர் தான் இசையமைத்துள்ளார்.
மேலும் கமலின் இந்தியன் 2 மற்றும் 3, அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் 23வது படம், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம், மற்றும் கவின் நடிக்கும் படம், அதர்வா படம் என தமிழிலும், விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம், அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் என தெலுங்கிலும் இசையமைத்துள்ளார்.