மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் மற்றும் நெல்சனை தொடர்ந்து... அனிருத்துக்கு அடித்த அதிர்ஷ்டம... சர்ப்ரைஸ் கிஃப்ட்.!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனில் பொன்னியின் செல்வன் சாதனையை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. இதுவரை 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் போது அதன் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ்-க்கு ஆடி கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதேபோல தற்போது ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை அதன் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்.
படத்தில் கதாநாயகனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு காசோலை ஒன்றை வழங்கிய அவர் பிஎம்டபிள்யூ X 7 கார் ஒன்றையும் பரிசாக வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குனரும் வெற்றிக்கு முக்கிய காரணமானவருமான நெல்சன் திலீப் குமாருக்கும் காசோலை வழங்கியவர் போர்ஸ் கார் ஒன்றையும் பரிசளித்தார்.
Mr.Kalanithi Maran congratulated @anirudhofficial and handed over a cheque, celebrating the mammoth success of #Jailer#JailerSuccessCelebrations pic.twitter.com/GRbiSKcuW1
— Sun Pictures (@sunpictures) September 4, 2023
தற்போது படத்தின் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்திற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. படத்தில் இவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப் பெரிய வரவேற்பு பெற்றதோடு இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்திருந்தது. இதனை கொண்டாடும் வகையில் அனிருத்தை சந்தித்த கலாநிதிமாறன் அவருக்கும் காசோலை ஒன்றை வழங்கியிருக்கிறார். விரைவிலேயே அவருக்கும் கார் பரிசு வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.