#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குதூகலமான பிக்பாஸ் வீடு! சின்ன மச்சான் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட அனிதா சம்பத்! அதுவும் யாருடன் ஜோடியாக பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே போட்டியாளர்களான செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் மாறிமாறி குறை பேசிக்கொண்டே இருந்தனர். மேலும் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூட இருவருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தது.
#Day10 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/QiB8MJwVQf
— Vijay Television (@vijaytelevision) October 14, 2020
இந்த நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் டான்ஸ் ஆடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சின்ன மச்சான் பாடலுக்கு அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் இணைந்து ஜோடியாக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.