#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதை ஒத்துக்கவே மாட்டேன்! இணையத்தில் பரவிய தகவல்! விளக்கமளித்து நடிகை அஞ்சலி கூறியுள்ளதை பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிதந்து திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அஞ்சலி தற்போது வெற்றிமாறன், கௌதம்மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த நிலையில் புதுமுக நடிகைகளின் வருகையால்தான் நடிகை அஞ்சலிக்கு பட வாய்ப்பு குறைந்ததாக இணையங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இதற்கு விளக்கமளித்து அஞ்சலி கூறியதாவது, புதுமுக நடிகைகளின் வருகையால், நடிகைகளுக்குள் நடக்கும் போட்டியால் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்று கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதே கிடையாது. மேலும் யாருடனும் சண்டை போட்டதும் கிடையாது. அனைத்து நடிகைகளுடனும் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவர்கள் படங்களில் நன்றாக நடித்து இருந்தால் அவர்களுக்கு நேராகவோ அல்லது போன் செய்தோ எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன் என அஞ்சலி கூறியுள்ளார்.