#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆரவாரத்தோடு பட்டையைக் கிளப்பி.. வெளியாகிறது அண்ணாத்த டீசர்! அதுவும் எப்போ தெரியுமா? வெளிவந்த அறிவிப்பு!!
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் அப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Aaravaarathoda pattaya kelapa!!#AnnaattheTeaser is releasing tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/tEU5SeGrGm
— Sun Pictures (@sunpictures) October 13, 2021
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆரவாரத்தோடு பட்டைய கிளப்ப என தெரிவித்து படக்குழு வெளியிட்டுள்ளது.