மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுபமா பரமேஸ்வரனுக்கு திடீர் திருமணமா.? வைரலாகும் புகைப்படம்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனுபவமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலம் அடைந்தார். படத்தின் பின்பு தமிழில் 'கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் 'சைரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் முதல் பாடலான நேற்று வரை என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அனுப்புமா பரமேஸ்வரன்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று கேட்டு கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் இப்புகைப்படம் 'சைரன்' படத்தில் பாட்டு காட்சி எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.