திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது.. பிரபாஸ் - அனுஷ்காவிற்கு கல்யாணமாகி குழந்தை இருக்கா.! இணையத்தை கலக்கும் செம கியூட் புகைப்படங்கள்!!
திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம்வரும் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்வதை போலவும், கையில் க்யூட்டான குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். அவரைப் போலவே டாப் நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.
இருவரும் இணைந்து பாகுபலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அப்பொழுது இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதனை இருவரும் மறுத்துவிட்டனர். ஆனாலும் இருவரும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளனர்.
இந்நிலையில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என விரும்பும் ரசிகர்கள் சந்தோசமடையும் அளவிற்கு அவர்கள் திருமணம் செய்துகொண்டது போலவும், கையில் க்யூட்டான குழந்தையுடன் இருப்பது போன்ற AI புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவித்து வருகிறது.