மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான அனுஷ்கா ஷெட்டியின் புகைப்படம்; எப்படி இருக்காங்க பாருங்க
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. இதனைத் தொடர்ந்து, தமிழில் தான் நடித்த முதல் படத்திலேயே தனது அழகால் மனதை கவர்ந்த நடிகை அனுஷ்கா, அதன்பின் மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கினர். அவர் நடித்த அருந்ததி படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தென்னிந்தியாவில் மாபெரும் வெற்றி அடைந்தது.
தொடர்ந்து, முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த அனுஷ்கா, அருந்ததி வெற்றிக்கு பிறகு பல படங்களில் கதாநாயகனே இல்லாத வரலாற்று கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸுடன் இவர் நடித்த பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது.
அனுஷ்கா இனி படங்களில் நடிக்க போவது இல்லை; நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார் என்ற செய்திகள் பரவின. அதற்கு காரணம், பாகமதி படத்திற்கு பிறகு அனுஷ்கா எந்த படங்களிலும் நடிக்காமல் இருப்பதே.
இந்த தகவல் அறிந்த அனுஷ்காவின் நெருங்கிய வட்டாரங்கள், அனுஷ்கா நடிப்புக்கு முழுக்கு போடவில்லை. விரைவில் அவர் படங்களில் நடிப்பார் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா, தன்னுடன் பாகுபலி படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனுடன் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
There isn't a word in the dictionary to describe how beautiful you are @meramyakrishnan ma'am ❤❤💋💙💚💛💜💓💕 #RamyaKrishnan #RamyaKrishna #AnushkaShetty sweety 💖 #Anushka #Baahubali2 #Tollywood #bollywood #kollywood pic.twitter.com/CFDwbUf6tV
— Varun (@VarunR_) January 22, 2019