திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அனுஷ்காவின் கண்டிஷனுக்கு ஓகே சொன்ன விஜய்.. ஆச்சர்யத்தில் கோலிவுட்.!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி . 'அருந்ததி' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவரது நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக இவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. அவர் உடல் எடை திடீரென அதிகரித்ததன் காரணமாகவே அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசு பரவியது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடிகை அனுஷ்காவை வைத்து தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பல இயக்குனர்கள் கதை சொல்லியும் அவர்களின் படத்தில் கமிட்டாகாத அனுஷ்கா இயக்குனர் விஜய்க்கு எப்படி 'ஓகே' சொன்னார் என்று சினிமா வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.
அந்தக் கேள்விக்கு தற்போது விடையும் கிடைத்திருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு கடினமான உணவு கட்டுப்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் அனுஷ்காவின் எடையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைக்க முடியவில்லை. இதனால் டெக்னாலஜியை பயன்படுத்தி தன்னை ஸ்லிம்மாக காட்டும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார் அனுஷ்கா. அந்த கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டு தன்னுடைய அடுத்த படத்தில் கதாநாயகியாக அனுஷ்காவை நடிக்க வைத்திருக்கிறார் விஜய்.