மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நல்ல கெமிஸ்ட்ரி.. நானும், சிம்ரனும் அப்படிதான் பழகினோம்.! பல வருடங்களுக்குப் பிறகு மனம்திறந்த நடிகர் அப்பாஸ்!!
மாடலிங்கில் இருந்து திரையுலகில் கால்பதித்து சாக்லேட் பாயாக வலம் வந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அப்பாஸ். அவர் தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.அதனை தொடர்ந்து பூச்சூடவா, விஐபி, மின்னலே,இனி எல்லாம் சுகமே உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
நடிகர் அப்பாஸ் நடிகை சிம்ரனுடன் இணைந்து விஐபி, பூச்சூடவா போன்ற படங்களில் நடித்திருந்தார். பூச்சூடவா படத்தில் அப்பாஸ், சிம்ரன் கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அப்பொழுது இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் நடிகை சிம்ரன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக முன்னேறினார். மேலும் நடிகர் அப்பாஸ்க்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
இந்நிலையில் தற்போது அப்பாஸ் பேட்டி ஒன்றில் நடிகை சிம்ரன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் இருவரும் நல்ல ஜோடியாக தெரிந்தோம். ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து அதிகளவில் படங்கள் நடிக்கவில்லை. சிம்ரனுடன் நான் தமிழில் இரு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் நடித்துள்ளேன். தற்போது கூட நான் அவருடன் பேசி வருகிறேன் என அப்பாஸ் கூறியுள்ளார்.