கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
நீதிமன்றத்தை நோக்கி ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ்!. அதிமுகவினரால் நேர்ந்த பயமோ!.
பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸின் வீட்டிற்கு நள்ளிரவில் பொலிசார் சென்றதால், அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், அது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
சண் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிருந்தார். இதில் வரும் சில காட்சிகள் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வன்முறையை தூண்டும் வகையில் சர்கார் படத்தில் காட்சிகள் வைத்த இயக்குனர், நடிகர் மற்றும் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
#Sarkar director AR Murugadoss moves Madras HC seeking anticipatory bail. Plea to be heard in the afternoon.#PeoplesFavSARKAR #SarkarVsTNSarkar pic.twitter.com/Y9GwhOAEdF
— Karnataka Vijay Fans (@KAOnlineVJFans) 9 November 2018
இந்த நிலையில் சர்கார் படம் ஓடும் திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சர்க்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.