திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலிவுட்டிற்கு பறக்கும் ஏஆர் முருகதாஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
2001ம் ஆண்டு "தீனா" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இவர், தமிழின் முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்களை இயக்கி வரும் ஏ ஆர் முருகதாஸ், இயக்குனராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியராகவும், படத்தயாரிப்பாளராகவும் உள்ளார். 2020ம் ஆண்டு ரஜினியை வைத்து இவர் இயக்கிய "தர்பார்" படம் தோல்வியைத் தழுவியது.
அதன்பிறகு சிலவருடங்களாக படங்களை இயக்காமல் இருந்து வந்த ஏ ஆர் முருகதாஸ், தற்போது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தனது புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.