கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
மாமன்னன் கதை 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த கதை - ஏ.ஆர்.ரஹ்மான்.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் நடிப்பில் கடந்த மே 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாமன்னன்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், மாமன்னன் கதை 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த கதை. என்னால் இசை மூலமாக எதையும் செய்ய முடியவில்லை. அதனால் செய்ய முடிந்தவர்களிடம் நான் இணைந்து விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.