திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடன புயலாக மாறிய இசைபுயல் ஏ ஆர் ரகுமான்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!?
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை புயல் எனும் பெயர் பெற்றுள்ளார்.
தமிழில் முதன் முதலில் 'ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் தற்போது வரை 1000கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இது போன்ற நிலையில் தற்போது ஆர் ரவிக்குமார் என்பவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிற்கும் திரைப்படம் 'அயலான்' . நான்கு வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
வேற்று கிரகவாசி பூமிக்கு வருவதையும், சிவகார்த்திகேயன் உதவியுடன் எப்படி திரும்பி செல்கிறது என்பதையும் கதைக்களமாக கொண்டே எடுக்கப்பட்டது தான் அயலான் திரைப்படம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிலையில் சமீபத்தில் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் ஏ ஆர் ரகுமான் நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு இசை புயல் ஏ ஆர் ரகுமான் நடன புயலாக மாறிட்டாரே என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.