திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேற லெவல்.. கோடி கோடியாய் அள்ளும் அரண்மனை 4.! 3 நாட்களிலேயே வசூல் இவ்வளவா!!
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் அரண்மனை. காமெடி கலந்த திரில்லர் பேய் பட ஜானரில் உருவான அந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில் சுந்தர் சி தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 போன்ற படங்களை எடுத்தார். இதில் அரண்மனை 3 ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் அரண்மனை 4. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கடந்த மே 3-ஆம் தேதி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த படத்தில் வரும் காமெடி காட்சிகள், திரில்லர் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் ரசிக்க வைத்துள்ளது.
மேலும் அரண்மனை 4 திரைப்படம் வசூலிலும் பெரும் சாதனை படைத்து வருகிறது. அதாவது படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. மேலும் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நேற்று ஏறக்குறைய 7.5கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே 18 கோடி வரை வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது.