திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்ற அரண்மனை 4 ட்ரைலர்; லிங்க் உள்ளே.!
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான அரண்மனை 3 பாகங்கள் நல்ல வெற்றியை அடைந்ததைத்தொடர்ந்து, இப்படத்தின் 4ம் (Aranmanai 4) பாகம் வெளியாகவுள்ளது. சுந்தர் சியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருக்கிறார்.
படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உட்பட பலரும் நடித்துள்ளனர். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், பென்னி ஒளிவர் எடிட்டிங்கில் ஹாலிவுட் பேய் படங்களுக்கு ஈடான மிரட்டல் காட்சிகளுடன் படம் தயாராகி இருக்கிறது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், யூடியூபில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பு பெற்றுள்ள அரண்மனை 4 திரைப்படம், ட்ரெண்டிங் நம்பர் 1ல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்த காமெடி, பேய் பயம் கொண்ட பதறவைக்கும் காட்சிகள் என படம் வரவேற்பு பெரும் என நம்பப்படுகிறது.