மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவருமா?? ராஜாராணி 2 தொடரிலிருந்து விலகும் முக்கிய நடிகை! அவருக்கு பதில் இவர் நடிக்கிறாரா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜா ராணி 2. இந்த தொடருக்கென ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து மற்றும் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் ராஜாராணி 2 தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர் அர்ச்சனா. இந்த தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் காமெடியான அவரது பேச்சும், வில்லத்தனமான பார்வையும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் திடீரென வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா ராஜாராணி 2 சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமடைந்த அர்ச்சனா குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.