#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடாமுயற்சியில் அர்ஜுன் நடிக்கிறாரா.? த்ரிஷா மறைமுகமாக கூறிய தகவல்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் திரிஷா.
ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர படங்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் த்ரிஷா. தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' லோகேஷ் இயக்கத்தில் 'விக்ரம்' போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். படம் மிகப்பெரும் வெற்றி அடைந்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார்.
இதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமான த்ரிஷா, சமீபத்தில் பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் நடிகர் அர்ஜூனுடன் 'மங்காத்தா' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி திரிஷா அடுத்ததாக நடிக்கப் போகும் விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.