#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. இவருக்குமா! நடிகர் அர்ஜுனுக்கு இப்படியொரு பிரச்சினையா! செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். தேசப்பற்று மிக்க, சமூக கருத்துகளை கொண்ட எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பல இவர் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படுகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அர்ஜுன் நடிப்பில் அண்மையில் மரைக்காயர் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் உள்ள தீவில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.