#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தூக்கி வைத்திருக்கும் அந்த முன்னணி பிரபலம் யார்னு தெரியுமா? கண்கலங்க வைத்த அரிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். அவர் தேசப்பற்று மிக்க, சமூக கருத்துகளை கொண்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்த இவர் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படுகிறார்
இவரது நடிப்பில் அண்மையில் மரைக்காயர் திரைப்படம் வெளியானது. மேலும் அர்ஜுன் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
Some things just don’t sink in.. My dear Appu is eternal. pic.twitter.com/Vx3CynNHtT
— Arjun (@akarjunofficial) December 9, 2021
இந்த நிலையில் அர்ஜுன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னட சினிமாவின் மாபெரும் பிரபலம் ஒருவரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார். மேலும் அந்த பதிவில் அவர், சில விஷயங்கள் எப்பொழுதும் மூழ்காது. எனது அன்புக்குரிய அப்புவும் என்றும் நிரந்தரமானவர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.