பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
வேற லெவல் போட்டோஷுட்... கருப்பு உடையில் கலக்கும் பாரதி கண்ணம்மா அருண்...
விஜய் டிவியில் மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தீடீரென சீரியலில் இருந்து வெளியேற தற்போது அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி நடிக்கவந்துள்ளார்.
நடிகை வினுஷா பார்ப்பதற்கு அப்படியே கண்ணம்மாவை போலவே இருப்பதால் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை. பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் முதலில் இருந்தே நடித்து வருபவர் நடிகர் அருண்.
அருண் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் அவரின் குழந்தை தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில் நடிகர் அருண் கருப்பு நிறத்தில் கோட் சூட் போட்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.