#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகுகிறாரா நம்ம பாரதி! இனி அவருக்கு பதில் நடிக்கபோவது இந்த நடிகரா? ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான தொடர்கள் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்படுகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடன் சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பாரதி கண்ணம்மா.
இந்த தொடரில் ஹீரோவாக, டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடித்து வந்தார். மேலும் இதில் கதாநாயகியாக, கண்ணம்மா ரோலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகிய நிலையில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் அகிலன், அஞ்சலி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்களும் அடுத்தடுத்ததாக மாறினர். இந்த நிலையில் தற்போது தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரிடமும் பிரபலமான நடிகர் அருண் பிரசாத்தும் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் நடிகர் சஞ்சீவ், பாரதியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை