குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நடிகர் அருண்விஜய் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்!!
நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான
என்.எஸ் மோகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் கைவசம் தற்போது சில படங்கள் உள்ளன. அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர்.
அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் டாக்டர் என்.எஸ் மோகனின் மகள் ஆவார். நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களான வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறக் காக்க உள்ளிட்ட படங்களை அவரது மாமனாரான என்.எஸ் மோகனே தயாரித்துள்ளார்.
இந்நிலையில் 68 வயதாகும் தயாரிப்பாளர் மோகன் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலமாகியுள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாம்.