மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது நம்ப ஆட்டம்.! புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா! பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக துஷாராவும், அவர்களுடன் கலையரசன், ஜான் கோக்கென் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜா இதில் ஆர்யாவிற்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்காக இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் ஆர்யா முறையாக குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார். இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை என பெயரிடப்பட்டுள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
.@K9Studioz proudly presents the First Look of @arya_offl's #SarpattaParambarai 🥊
— pa.ranjith (@beemji) December 2, 2020
A @beemji film
இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா pic.twitter.com/kOsTORQwXQ
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித், இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.