திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானம் படத்தை தயாரிக்கும் ஆர்யா.. அவரே வெளியிட்ட அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். தற்போது இவர் ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியது. அதற்கு காரணம் சந்தானம் பேசிய ராமசாமி என்ற வசனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். மேலும் இந்த விழாவில் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சந்தானம், டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறினார். இந்தப் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்குவதாகவும், நடிகர் ஆர்யா தயாரிப்பதாகவும் கூறியுள்ளார்.