மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் ஆர்யா செய்யவிருக்கும் அசத்தல் காரியம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குக் வித் கோமாளி அஸ்வின்! என்ன விஷயம் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தலாக சமைத்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின். போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் கலகலப்பாக இருக்கும் இவர் இளம்பெண்களின் கனவுகண்ணனாக வலம் வந்தார்.
அஸ்வின் இதற்கு முன்பு விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார். மேலும் பல திரைப்படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரத்திலும், ஏராளமான குறும்படங்களிலும் கூட நடித்துள்ளார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. அவர்
TRIDENT ARTS உடன் இணைந்து ஒரு படத்திற்கு ஒப்புக்கொண்டு இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
A dream 💭
— Ashwin Kumar Lakshmikanthan (@i_amak) June 27, 2021
Longing 🙇🏻
Perseverance ✊🏻
And here it is 🔥
Thank you all for bringing me here 🖤 https://t.co/5wMypPLB6w
இந்த நிலையில் TRIDENT ARTS நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களது தயாரிப்பு எண் 7, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று 7மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிடுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். காத்திருங்கள் என அறிவித்திருந்தனர். இதனை பகிர்ந்த அஸ்வின், ஒரு கனவு, ஏக்கம், விடாமுயற்சி, இங்கே இருக்கிறது. என்னை இங்கு அழைத்து வந்ததற்கு நன்றி என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் அஸ்வினுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.